திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் கலசபாக்கத்தில் கடந்த 12ஆம் தேதி 4 ஏடிஎம் மையங்களில் இயந்திரங்களை உடைத்து மர்மகும்பல் ரூ.80 லட்சத்தை திருடி சென்றுள்ளது. திருட்டு நடைபெற்ற மூன்று தேசிய வங்கி ஏடிஎம் மையங்களிலும் இயந்திரத்தை உடைத்தபோது அபாய மணி ஒலிக்காதது ஏன்? என்பது குறித்து அந்த வங்கியின் தொழில்நுட்ப அலுவலர்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த வடக்கு மண்டல ஐ சி கண்ணன், வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, காவல் கண்காணிப்பாளர்கள் கார்த்திகேயன், கிரண் ஸ்ருதி, பாலகிருஷ்ணன், ராஜேஷ் கண்ணா மற்றும் போலீசார் திருவண்ணாமலைக்கு சென்று திருட்டு நடைபெற்ற நான்கு ஏ டி எம் மையங்களிலும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த மர்ம கும்ப கும்பலை பிடிக்க திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் 8 தனிப்படைகளை அமைத்து வடக்கு மண்டல  ஐஜி கண்ணன் உத்தரவிட்டுள்ளார். அவர்கள் வாகன தணிக்கை கண்காணிப்பு, கேமரா ஆய்வு என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே வடமாநில நபர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என வடக்கு மண்டல ஐஜி கண்ணன் கூறியுள்ளார். ஹரியானவை சேர்ந்த ஹரிப், ஆசாத், பாஷா, அப்சர் ஆகிய நான்கு பேர் ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கொள்ளை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான நிஜாமுதீனை சென்னை தடிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏடிஎம் கொள்ளை வழக்கில் இதுவரை மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.