முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இவர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக மலை அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை பிரதான வழியாக உள்ளது. மேலும் பக்தர்கள் விரைவாகவும், இயற்கை அழகை ரசிப்பதற்காகவும் ரோப் கார் மற்றும் மின் இழுவை ரயில் ஆகிய சேவைகள் உள்ளன.
இந்த ரோப் கார் நிலையத்தில் மாதாந்திர மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவது உண்டு. அப்போது ரோப் கார் வசதி நிறுத்தப்படும். அதன்படி ஜூலை 15ஆம் தேதி முதல் 31 நாட்களுக்கு ரோப் கார் சேவை இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு நாள் மட்டுமே ரோப் கார் சேவை நிறுத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் தற்போது 31 நாட்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
