ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு ஹோட்டலில், திருமணமான பெண் ஒருவர் தனது கணவருக்குத் தெரியாமல் காதலனுடன் இருந்தபோது, அவரது மாமியார் வீட்டாரால் பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணின் நடத்தை மீது சந்தேகம் கொண்ட அவரது கணவர், மாமியார் மற்றும் நாத்தனார் ஆகியோர் ரகசியமாக அவரைப் பின்தொடர்ந்து அந்த ஹோட்டலுக்குச் சென்றுள்ளனர்.
அங்கு அவர்கள் எதிர்பார்த்தபடியே, அந்தப் பெண் மற்றொரு நபருடன் தங்கியிருந்ததை உறுதி செய்து, ஹோட்டல் அறைக்குள் அதிரடியாக நுழைந்துள்ளனர். அறைக்குள் நுழைந்த மாமியாரும் நாத்தனாரும் அந்தப் பெண்ணையும் அவரது காதலனையும் கையைப் பிடித்து இழுத்து வெளியே கொண்டு வர முயன்றனர்.
Extra-Marital affair Kalesh (Husband Caught his wife another man at hotel in Sector 37, Faridabad) pic.twitter.com/lTWd3A9sLA
— Ghar Ke Kalesh (@gharkekalesh) July 16, 2026
“>
இந்தத் திடீர் சலசலப்பால் பயந்துபோன அந்தப் பெண்ணின் காதலன், அவளை அங்கேயே தவிக்கவிட்டு விட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டான். இதனால் ஆத்திரமடைந்த மாமியார் வீட்டாரும், கணவனும் ஹோட்டலுக்கு வெளியேயும் சாலையிலும் வைத்து அந்தப் பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மாமியாரும் நாத்தனாரும் அந்தப் பெண்ணின் மொபைல் போனைப் பறித்ததால், கோபமடைந்த அந்தப் பெண் நடுரோட்டில் பெரிய அளவில் கூச்சலிட்டு கலாட்டா செய்யத் தொடங்கினார்.
இதற்கிடையில், அந்தப் பெண் தன் தவறை மறைப்பதற்காக அழுதுகொண்டே ஓடிச் சென்று தனது கணவனின் நெஞ்சோடு கட்டியணைத்துக் கொண்டு, “என்னை விட்டுவிடுங்கள், என்னை போகவிடுங்கள்” என்று சத்தமாக அழத் தொடங்கினார். ஆனால், அவளது கணவர் எந்த எதிர்வினையும் ஆற்றாமல் அமைதியாக நின்றுகொண்டிருந்தார். இந்த நடுரோட்டுப் போராட்டத்தைக் கண்டு அந்த இடத்தில் ஏராளமான பொதுமக்கள் கூடினர்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “இக்காலகட்டத்தில் திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் அதிகரித்துவிட்டன” என்றும், “தவறு செய்துவிட்டு அழுது நாடகமாடுகிறார்” என்றும் நெட்டிசன்கள் பலரும் அந்தப் பெண்ணிற்கு எதிராகக் கடுமையான கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
