கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த சட்டசபை தேர்தலில் அதிமுக போட்டியிடுவதற்கு ஆர்வம் காட்டி வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் புலிகேசி நகரில் தொகுதியில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் கர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து புலிகேசி நகர் தொகுதியில் தன் வேட்பாளரை அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது மேலும் இரண்டு தொகுதிகளில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரை அறிவித்துள்ளது. அதன்படி கோலார் மற்றும் காந்திநகர் ஆகிய தொகுதிகளில் ஓபிஎஸ் தரப்பு சார்பில் வேட்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி கோளாறு தங்க வயல் தொகுதியில் ஆனந்த்ராஜ் என்பவரும், காந்திநகர் சட்டமன்ற தொகுதியில் K. குமார் என்பவரும் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.