இமாசலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள பர்மோர் மலைப்பகுதியில் உயிரிழந்த தனது உரிமையாளரின் உடலை நான்கு நாட்களாகக் கடும் குளிரிலும் பனிப்பொழிவிலும் ஒரு நாய் காவல் காத்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.
हिमाचल प्रदेश चंबा जिले के भरमौर में भारी बर्फबारी में भी नहीं छोड़ा साथ, 4 दिन तक भूखा-प्यासा मालिक के शव पर पहरा देता रहा ‘बेजुबान’
जानकारी के अनुसार, भरमौर के ऊंचे पहाड़ी क्षेत्र में भरमाणी माता मंदिर के पास एक युवक की बर्फबारी और ठंड की चपेट में आने से मृत्यु हो गई थी. 4… pic.twitter.com/oQKXBAJ242
— NDTV India (@ndtvindia) January 26, 2026
அப்பகுதியில் நிலவிய கடும் குளிரால் உறைந்து ஒரு நபர் உயிரிழந்த நிலையில், அவரது வளர்ப்பு நாய் பசியையும் கடும் பனியையும் பொருட்படுத்தாமல் அந்த உடலைப் பாதுகாத்து வந்துள்ளது. நான்கு நாட்களுக்குப் பிறகு மீட்புக் குழுவினர் அங்கு சென்றபோது, அந்த நாய் தனது உரிமையாளரின் உடலை விட்டு நகர மறுத்ததைக் கண்டு அவர்கள் கண்கலங்கினர்.
தொடக்கத்தில் உடலைத் தொட விடாமல் ஆக்ரோஷமாக இருந்த அந்த நாய், பின்னர் மீட்புக் குழுவினரின் சமாதானத்திற்குப் பிறகு வழிவிட்டது. ஜப்பானின் புகழ்பெற்ற ஹாச்சிகோ நாயின் வொபாநேசத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்த இந்தச் சம்பவம், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான ஆழமான பிணைப்பை உலகிற்கு உணர்த்தியுள்ளது.
