திருவள்ளூர் மாவட்டம் செங்கப்பம் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு பெற்றோர் கிடையாது. இதனால் பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். 10-ம் வகுப்பை பாதியில் நிறுத்திய இவருக்கும், 18 வயது சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்தச் சிறுவன் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி திருப்பூருக்கு அழைத்து வந்துள்ளார். அதன் பின் அச்சிறுமியை திருமணம் செய்து கொண்டு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சிறுமி கர்ப்பம் ஆகியுள்ளார். இதையடுத்து அவரை அரசு மருத்துவமனைக்கு சிறுவன் அழைத்துச் சென்றார். அப்போது அங்கு சிறுமி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதும், 18 வயதுக்கு உட்பட்ட சிறுமி என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது சிறுமிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து மருத்துவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 18 வயது சிறுவடை கைது செய்தனர்.