தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் நடிகர் வடிவேலு. இவர் சமீப காலத்தில் நடிகராகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு பிரபு தேவா, வடிவேலு இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளனர். இப்படத்தை டார்லிங், 100, எனக்கு இன்னொரு பெயர் இருக்கு போன்ற படங்களை இயக்கிய ஷாம் ஆண்டன் இயக்க இருக்கிறார்.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க உள்ளார். முன்னதாக பிரபுதேவா, வடிவேலு இணைந்து காதலன், எங்கள் அண்ணன், மனதை திருடிவிட்டாய், மிஸ்டர் ரோமியோ போன்ற படங்களில் நடித்துள்ளனர். பிரபு தேவா இயக்கியுள்ள பேக்கரி மற்றும் வில்லு திரைப்படங்களிலும் வடிவேலு பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
