செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நேற்றைய தினம் பொதுச் செயலாளர் சொல்லி இருக்காரு. அதனால்  தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கு.  கூட்டணி அமைவது குறித்து எல்லாம் பேச்சுவார்த்தைகள் நடந்துட்டு இருக்கு. அதை வந்து உரிய நேரத்தில் உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று பொதுச் செயலாளர் உங்களுக்கு தகவல் சொல்லி இருக்காரு.

எனவே அந்த   இப்ப எங்கள பொறுத்த வரையிலுல் 10 பேர் கொண்ட குழு மக்களுடைய கருத்துக்களை கேட்டு, அதை பிரதிபலிக்கும் வகையில்…  மாநிலத்தின் உரிமைகளை பேணிக்காக்கும் வகையில் தேர்தல் அறிக்கை அமையும்.  அதெல்லாம் கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடந்துட்டு தான் இருக்கும். அதையெல்லாம் உரிய நேரத்தில். உங்களுக்கு சொல்லுவோம். இப்ப ஏன் நீங்க அத பத்தி கேள்வி கேக்குறீங்க. உரிய நேரத்தில் உங்களுக்கு தகவல் தெரிவிப்போம்.

TTV தினகரன் ஒரு தனி மரம். ஒரு பெரிய தோப்பு அனைத்திந்திய  அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்.  பெரிய அளவிற்கு ஆலமரம் போல  எல்லாருக்கும்  நிழல் தரக்கூடிய ஒரு இயக்கம் அனைத்திந்திய  அண்ணா திராவிட முன்னேற்ற கழக இயக்கம்.

இன்றைக்கு பார்த்தீங்கன்னா….. எங்களோடு எல்லா கட்சிகளும்….  தேர்தல் நாள் நெருங்க நெருங்க நிறைய பேர் வருகின்ற வாய்ப்புகள் இருக்கு. அதனால் டிடிவி தினகரனை நாங்கள் ஒரு பொருட்டாக கருதுவதில்லை என தெரிவித்தார்.