உலக அதிசயமான தாஜ்மஹாலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் விலையுயர்ந்த ஐபோன்களையும், டிஎஸ்எல்ஆர் (DSLR) கேமராக்களையும் கையில் ஏந்தியபடி போஸ் கொடுப்பது தான் வழக்கம்.
ஆனால், சமீபத்தில் வைரலான ஒரு வீடியோவில், ஒரு முதியவர் அங்கிருந்த ஒரு வ்லாகரிடம் (Vlogger) தனது சாதாரண ‘பீச்சர் போனை’ (Feature Phone) நீட்டி, தன்னையும் தன் மனைவியையும் ஒரு புகைப்படம் எடுத்துத் தரும்படி கேட்டுள்ளார்.
அந்த போனில் கேமரா ஆப்ஷனைத் தேட வ்லாகர் சிறிது நேரம் தடுமாறினாலும், இறுதியில் அந்தத் தம்பதியை அழகாகப் படம் பிடித்தார்.
View this post on Instagram
புகைப்படத்தைப் பார்த்த அந்த முதியவரின் முகத்தில் மின்னிய அந்த உண்மையான புன்னகை, பல கோடி ரூபாய் மதிப்புள்ள கேமராக்களால் கூட தர முடியாத மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.
“புகைப்படத்தின் தரம் முக்கியமல்ல, அந்த நிமிடம் தரும் நினைவுகள் தான் முக்கியம்” என்ற வாசகத்துடன் பகிரப்பட்ட இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை வென்று வருகிறது. “அன்பிற்குத் தரம் தேவையில்லை” என நெட்டிசன்கள் இந்தத் தம்பதியை மனதாரப் பாராட்டி வருகின்றனர்.
