சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ பலரையும் அலற வைத்துள்ளது. அதில், முதியவர் ஒருவர் தரையில் அமர்ந்திருக்க, அவருக்குப் பின்னால் ஒரு பிரம்மாண்டமான புலி நிற்கிறது.

மற்றொரு நபர் அந்தப் புலிக்கு பாட்டிலில் பால் கொடுத்துக் கொண்டிருக்க, திடீரென அந்தப் புலியின் இரு கால்களையும் முதியவரின் தோள் மீது தூக்கி வைக்கின்றனர்.

புலி எப்போது வேண்டுமானாலும் அவரைத் தாக்கலாம் என்ற நிலையில், அந்த முதியவர் அசால்ட்டாகப் போஸ் கொடுப்பதைப் பார்த்து நெட்டிசன்கள் மிரண்டு போயுள்ளனர்.

இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு, “அந்தப் பாட்டிலில் பால் தீர்ந்துவிட்டால் முதியவரின் கதி அவ்வளவுதான்” எனப் பலரும் கமெண்ட் செய்து வந்தனர். ஆனால், ஆழ்ந்து கவனித்தால் இந்த வீடியோவின் உண்மை முகம் வெளிப்படுகிறது:

இது நிஜமான வீடியோ அல்ல; செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட ‘ஹைப்பர்-ரியலிஸ்டிக்’ வீடியோ ஆகும். புலியின் அசைவுகள் முதல் முதியவரின் முகபாவனை வரை அனைத்தும் மிகவும் துல்லியமாக உருவாக்கப்பட்டதால், இது நிஜம் எனப் பலரும் நம்பிவிட்டனர்.

ஆபத்தான வனவிலங்குகளுடன் இது போன்ற சாகசங்களில் ஈடுபடுவது உயிருக்கே உலைய வைக்கும் என்பதால், இதுபோன்ற வீடியோக்களைப் பார்த்து யாரும் முயற்சிக்க வேண்டாம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இன்றைய காலத்தில், கண்ணால் பார்ப்பது கூட பொய்யாக இருக்கலாம் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சாட்சியாக அமைந்துள்ளது.