ரிச்சா அகர்வால் என்ற பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ, பலரது கண்களைக் குளமாக்கியுள்ளது. தனது குட்டித் தங்கையைப் பார்க்க ஆசையாக மருத்துவமனைக்கு வந்த அந்தச் சிறுவன், பெட்டில் இருந்த தாயைப் பார்த்ததும் அப்படியே உறைந்து போனான்.

பிறந்த குழந்தையை விட, கையில் ஊசி மற்றும் குளூக்கோஸ் குழாய்களுடன் இருந்த தாயைப் பார்த்ததும் அவனுக்கு அழுகையே வந்துவிட்டது. “அம்மா உங்களுக்கு என்ன ஆச்சு? ஏன் நைட்சூட் (மருத்துவமனை உடை) போட்டு இருக்கீங்க?” என அவன் கேட்ட மழலை மொழியில் அத்தனை அக்கறை கலந்திருந்தது.

 

View this post on Instagram

 

A post shared by Richa Agarwal (@baniya2bengali)

தங்கையைப் பார்த்ததும், “இது நிஜமான பாப்பாவா? இல்லை விளையாடும் பொம்மையா?” என அவன் கேட்டது அங்கிருந்தவர்களைச் சிரிக்க வைத்தது. பாப்பா நிஜம் தான் என்று தெரிந்ததும், ஆச்சரியத்துடன் அவளைத் தொட்டுப் பார்த்த அந்தத் தருணம் மிகவும் அழகாக இருந்தது.

“ஒரு தாயின் வலி எப்போதும் வெளியே தெரிவதில்லை; ஆனால் அந்த வலியையும் தாண்டி ஒரு குழந்தைக்குத் தாயாக இருப்பதில் தான் பெருமை இருக்கிறது” என அந்தத் தாய் பதிவிட்டுள்ளார். தாயின் உடல்நலனில் அக்கறை காட்டும் இந்தச் சிறுவன், எதிர்காலத்தில் ஒரு சிறந்த மகனாகவும், பாசமான அண்ணனாகவும் இருப்பான் என நெட்டிசன்கள் வாழ்த்தி வருகின்றனர்.