உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் நிலம் தொடர்பான முன்விரோதம் காரணமாக இந்த மோதல் வெடித்துள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த பிண்டு என்ற ரவுடி, ஒரு குடும்பத்தினர் மீது தடி மற்றும் கட்டைகளைக் கொண்டு கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளார். அங்கிருந்த பெண்கள் மற்றும் சிறுமிகள் என்று கூடப் பார்க்காமல் அவர் ஆவேசமாகத் தாக்கிய காட்சிகள் பார்ப்பவர் நெஞ்சைப் பதற வைக்கிறது.

இந்தக் கொடூரத் தாக்குதலில் தீபா, நீலம், சந்திராவதி மற்றும் ஆராதனா உள்ளிட்ட பெண்களும், சில குழந்தைகளும் பலத்த காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய பிண்டு என்பவர் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது வைரலாகி வரும் வீடியோ ஆதாரத்தை வைத்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அந்த ரவுடியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.