கர்நாடக மாநிலம் உடுப்பியில் ஆள் நடமாட்டம் மிகுந்த சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. சாலையில் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த காரின் ஓட்டுநர், தனது கதவைத் திறந்து கொண்டு வெளியே வர முயன்றார்.
ஆனால், அவர் கதவை மூடுவதற்கு முன்பே கார் எதிர்பாராத விதமாக மின்னல் வேகத்தில் பின்னோக்கி நகரத் தொடங்கியது. நிலைதடுமாறிய ஓட்டுநர் காரை நிறுத்தப் போராடியும் பலனில்லை.
#Udupi 🚨⚠️
Disturbing Visuals 🚨
Automatic car, confusion b/w brake & accelerator pedal?
Cars door also not closed, moved little forward and rolled back…@DriveSmart_IN @dabir @RCBengaluru @InfraEye pic.twitter.com/1rMjd9htl3
— Dave (Road Safety: City & Highways) (@motordave2) January 2, 2026
திறந்த கதவுடன் பின்னோக்கிப் பாய்ந்த அந்த கார், பின்னால் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள் மீது பலமாக மோதியது.
இதில் பைக்குகளில் வந்தவர்கள் நிலைகுலைந்து கீழே விழுந்தனர். காரின் கதவு அங்கிருந்த மின் கம்பம் அல்லது சுவரில் மோதி நொறுங்கியது.
இந்த விபத்தில் வாகனங்கள் பலத்த சேதமடைந்தாலும், நல்வாய்ப்பாக யாருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை எனத் தெரிகிறது. காரின் கியர் அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்ததா எனப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
