தமிழ் சினிமாவில் வெப்பம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகராக அறிமுகமானவர் நானி. தற்போது தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நானி ஸ்ரீகாந்த் ஓடலா இயக்கத்தில் தசரா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். எஸ்எல்வி சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள தசரா திரைப்படம் மார்ச் மாதம் 30-ம் தேதி பான் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தின் டிரைலர் வீடியோ அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அண்மையில் ஊடகத்திற்கு அளித்த ஒரு பேட்டியில் நடிகர் நானி தசரா படத்தின் உண்மைத்தன்மைக்காக இயக்குனர் கேட்டுக் கொண்டதற்காக மது குடித்துவிட்டு படத்தில் நடித்ததாக கூறியுள்ளார். மேலும் இந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.