பிரபல இந்தி நடிகையான சுஷ்மிதா சென், தமிழில் ரட்சகன் திரைப்படத்தில் நாயகியாக நடித்து உள்ளார். மேலும் முதல்வன் திரைப்படத்தில் இடம்பெற்ற சக்கலக்க பேபி பாடலுக்கு நடனமாடி இருந்தார். அண்மையில் சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இப்போது சிகிச்சைக்குப் பின் குணமடைந்து உள்ளார். இந்நிலையில் சுஷ்மிதா சென் கூறியதாவது, “பெண்களுக்கும், ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கும் மாரடைப்பு வராது என்பது உண்மையில்லை.

இதய நாளங்களில் 90% அடைப்பு இருந்தது. எனினும் நான் ஆரோக்கியமாக இருந்ததால் தான் காப்பாற்ற முடிந்தது என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆகவே பெண்கள் தினசரி உடற்பயிற்சி செய்யுங்கள். மன அழுத்தம், மன உளைச்சல் ஆகியவை மாரடைப்புக்கு வழிவகுக்கும். ஆகவே பெண்களே தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சிக்கு ஒதுக்குங்கள். மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள்” என்று அவர் கூறினார்.