கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள பகுதியில் சங்கீத்(20) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சமூக வலைதளம் மூலம் 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. 2 பேரும் செல்போன் எண்களை பரமாரி கொண்டு அடிக்கடி பேசி வந்துள்ளனர். பின்னர் அவர்கள் நெருங்கி பழகியுள்ளனர். இதற்கிடையில் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கண்ணூரில் உள்ள விடுதிக்கு வருமாறு அழைத்த சங்கீத், தனது நண்பர்களான அபிஷேக்(20), ஆகாஷ்(20) ஆகிய 2 பேருடன் சென்றுள்ளார்.
அங்கு சிறுமிக்கு சங்கீத் குளிர்பானம் கொடுத்துள்ளார். அதில் மயக்கம் மருந்து கலந்து இருப்பதை அறியாத சிறுமி அதனை வாங்கி குடித்து மயக்கம் அடைந்தார். இதையடுத்து சங்கீத் உள்ளிட்ட 3 பேரும் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து அந்தச் சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து காவல்துறையினர் சம்பந்தப்பட்ட மூன்று பேரையும் கைது செய்தனர்.
