தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதிக்கு சுற்றுலா வந்த நபர் ஒருவர் தனது அபாரமான உடல் தோற்றத்தால் அங்கிருந்த மக்களின் கவனத்தை ஈர்த்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 7 அடி 2 அங்குலம் உயரமுள்ள இமான்சு சின்கா எனும் இந்த இளைஞர் அங்கு வந்தபோது அவரைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் வியப்பில் ஆழ்ந்தனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by HIMANSHU SINHA (@the_bigman__)

சுற்றுலாத் தலத்தைப் பார்க்க வந்த இடத்தில் இமான்சு சின்காவே ஒரு சுற்றுலாத் தலமாக மாறிய விந்தையான நிகழ்வு அங்கு அரங்கேறியது. அவரைப் பார்த்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுக்கவும் அவருடன் இணைந்து காணொளி எடுக்கவும் ஆர்வம் காட்டினர்.

நாட்டின் மிக உயரமான உள்ளடக்க உருவாக்குநராக அறியப்படும் இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்து சுற்றுலாத் தலத்திற்கு வந்துவிட்டு நானே ஒரு சுற்றுலாத் தலமாக மாறிவிட்டேன் என நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். கோடிக்கணக்கான பார்வைகளைக் கடந்துள்ள இந்த வீடியோவில் ஏழு அடி உயரமுள்ள இவரை மக்கள் ஆச்சரியத்துடன் அண்ணாந்து பார்ப்பது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.