தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 80 வயது முதியவர் நக்கா இந்திரய்யா, தனது இறுதிப்பயணத்திற்குப் பிறகான தங்குமிடத்தை முன்கூட்டியே திட்டமிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். மரணத்திற்குப் பின் தான் அடக்கம் செய்யப்பட வேண்டிய கல்லறையை, சுமார் 12 லட்சம் ரூபாய் செலவில் பிரம்மாண்டமான கிரானைட் கற்களைக் கொண்டு அவர் இப்போதே கட்டி முடித்துள்ளார்.

மேலும் “இதுதான் என் வருங்கால வீடு” என்று பெருமையுடன் கூறும் அவர், தனது வாழ்நாளிலேயே தனக்கான இறுதி ஓய்விடத்தை நேர்த்தியாக அமைத்திருப்பது அந்தப் பகுதியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்திரய்யா வெறும் கல்லறையை மட்டும் கட்டி முடிக்காமல், அதன் பராமரிப்பிலும் அதீத அக்கறை காட்டி வருகிறார்.

இது தினமும் அந்த இடத்திற்குச் செல்லும் அவர், கல்லறையைச் சுத்தம் செய்வதுடன், அதனைச் சுற்றியுள்ள செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிப் பராமரிப்பதையும் ஒரு கடமையாகச் செய்து வருகிறார். எதிர்காலத்தைப் பற்றிய பயமின்றி, மரணத்தை ஒரு எதார்த்தமாக ஏற்றுக்கொண்ட அவரது இந்தச் செயல், வாழ்வின் நிலையற்ற தன்மையையும் அதே சமயம் ஒரு மனிதனின் முன்னெச்சரிக்கை திட்டமிடலையும் ஒருசேரப் பிரதிபலிக்கிறது.