இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் 3வது டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 10இல் நடைபெற்றது. அதில் முதல் இன்னிங்ஸில் 2 அணிகளும் ஒரே ரன்கள் எடுத்தன.
அதனை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 192 ரன்கள் எடுத்தது. அதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 74.5 ஓவர்களில் 170 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
Siraj misbehaved with Root in the first innings, but still, Root is greeting him warmly. We really chose the right person to idolize. pic.twitter.com/7bUAhhbQwk
— Silme (@silme47) July 14, 2025
அதனால் 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றியை பெற்றது. இந்நிலையில் அந்தப் போட்டியின் கடைசியில் விக்கெட்டுக்கு நுழைந்த முகமது சிராஜ் துணையுடன் ஜடேஜா தொடர்ந்து 4ஆவது அரை சதத்தை கடந்தார்.
அந்தச் சூழலில் சுழற் பந்து வீச்சாளர் சோய் பஷீர் வீசிய பந்தை சிராஜ் எதிர்கொண்டார். அப்போது பந்து பேட்டில் பட்டு உருண்டு ஸ்டம்பை தட்டியது. அதை சிராஜ் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆனால் அதை காலால் தள்ளிவிட முயற்சிக்கவில்லை. இதனை அடுத்து சிராஜ் 4 ரன்னில் கிளீன் போல்ட் ஆனார். அதன் முடிவில் இந்திய அணி 74.5 ஓவர்களில் 17 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மேலும் அந்தப் போட்டியில் ஜடேஜா 61 ரன்கள் உடன் கடைசி வரை களத்தில் இருந்தார்.
இந்நிலையில் அந்தப் போட்டியில் ஆட்டம் இழந்ததும் சிராஜ் அப்படியே மைதானத்தில் தலை குனிந்தவாறு நின்று கொண்டிருந்தார். இதனை கண்ட இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் மற்றும் ஜாக்கிராவ்லி சிராஜை நோக்கி வந்து அவரிடம் ஆறுதல் கூறி தேற்றினர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
