உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காசியாபாத் நகரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் முதலமைச்சர் தனிப்பிரிவில் ஆர்சிபி கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் மீது திருமணம் மோசடி புகார் அளித்துள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அந்தப் புகாரில் கடந்த 5 ஆண்டுகளாக தானும், யாஷ் தயாாலும் கணவன்- மனைவி போல் வாழ்ந்ததாகவும், அதனால் உணர்ச்சி ரீதியாகவும், மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் அவர் தன்னை பயன்படுத்தியதாகவும் தற்போது தன்னை திருமணம் செய்து கொள்ள மறப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சில பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அதற்கான ஆதாரங்களான ஸ்கிரீன்ஷாட்கள் மெசேஜ்கள் வீடியோ கால் ரெக்கார்டுகள் புகைப்பட ஆதாரங்களை வைத்திருப்பதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் தெரிவித்திருந்தார்.

இது குறித்து உத்திரபிரதேச காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இது குறித்த வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சித்தார்த்த வர்மா மற்றும் நீதிபதி அனில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ஒரு நபரை ஒரு நாள், 2 நாள், 2 நாள் ஏமாற்றி இருக்கலாம். ஆனால் 5 வருடங்களாக ஏமாற்ற முடியாது. நீங்கள் 5 வருடங்களாக ஒரு உறவில் நுழைகிறீர்கள். அப்படியானால் 5 வருடங்களாக ஒருவரை ஏமாற்றுவது முடியாது” என வாய்மொழியாக கூறியது. பின்னர் கிரிக்கெட் வீரர் யாஷ் தயாளை கைது செய்ய நீதிபதிகள் தடை விதித்து உத்தரவிட்டனர்.