இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் 3வது டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 10இல் நடைபெற்றது. அதில் முதல் இன்னிங்ஸில் 2 அணிகளும் ஒரே ரன்கள் எடுத்தன.
அதனை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 192 ரன்கள் எடுத்தது. அதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 74.5 ஓவர்களில் 170 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
🗣 “600 runs and he is done for the series.” #BenDuckett throws some cheeky comments while bowling, will #ShubmanGill silence him with a strong statement by tour’s end? 🤔
Will #TeamIndia seize control on Day 5 and take a 2-1 lead in this thrilling Test series? 🫣#ENGvIND 👉… pic.twitter.com/xNI6BDO8bz
— Star Sports (@StarSportsIndia) July 13, 2025
அதனால் 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றியை பெற்றது. இந்நிலையில் அந்தப் போட்டியின் நடுவே, இந்திய அணி பேட்டிங் செய்த போது, கேப்டன் சுப்மன் கில்லை இங்கிலாந்து வீரர் பென் டக்கட் ஸ்லெட்ஜிங் செய்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோ ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோவில் பென்டக்கட், “இந்த தொடரில் இந்தப் பையன் 600 ரன்கள் எடுத்தது போதும். அதுவே அவருக்கு அதிகம்” என விமர்சித்துள்ளார். தற்போது இது குறித்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
