இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் நடைபெற்றது. போட்டி பரபரப்பான நிலையில் போய் கொண்டிருக்கும்போதே, களநடுவர் பால் ரீபெல் மீது இந்திய ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் கடும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.
போட்டியின் 3-வது நாளில் நடந்த இரண்டு முடிவுகளே இது தொடர்பான சர்ச்சையை கிளப்பியது. முதலில், இங்கிலாந்து 2-வது இன்னிங்ஸில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் வீசிய பந்து, ஜோ ரூட்டின் காலில் பட்டது. இந்தியா அப்பீல் செய்தது, ஆனால் umpire ரீபெல் “நாட் அவுட்” என்ற தீர்ப்பை வழங்கினார்.
இந்தியா உடனடியாக DRS எடுத்தது. அதில் பந்து லெக் ஸ்டம்பை லேசாகத் தொடுவதுபோல் தெரிய வந்தது. ஆனால் umpire’s call என்பதால் முந்தைய தீர்ப்பு நிலைநிறுத்தப்பட்டது. இது குறித்து இந்திய முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே, “இது ரீபெலின் மிரட்டல் தீர்ப்பு போல தெரிகிறது” என கடுமையான அதிருப்தி தெரிவித்தார்.
இதேபோன்று, இந்தியாவின் 2-வது இன்னிங்ஸில் சுப்மன் கில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பேட்டிற்கும் பந்திற்கும் இடைவெளி இருந்தாலும், இங்கிலாந்து அப்பீல் செய்ததும் umpire ரீபெல் உடனடியாக அவுட் தீர்ப்பு வழங்கினார். இந்தியா DRS எடுத்தபோது அவர் அவுட்டிலிருந்து தப்பினார். இது உண்மையில் “நம்ப முடியாத முடிவு” என ரசிகர்கள் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய ஸ்பின்னருமான ஆர்.அஸ்வின், நடுவரின் செயல்பாட்டை எதிர்த்து பேசினார். “பால் ரீபெலுடன் நான் நேரில் பேச விரும்புகிறேன்… இந்தியா பந்து வீசும்போது அவர் எதிரணிக்கு நாட் அவுட், இந்தியா பேட்டிங் செய்யும்போது அவுட் என்று தீர்ப்பு வழங்குவது ஏன்?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், “என் அப்பா கூட சொல்வார், பால் ரீபெல் வரும்போது இந்தியா ஜெயிக்காது” என்று கூறினார்.

அதேபோல, முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் மைக் அதர்டன் மற்றும் நாசர் உசேன் கூட, “வீரர்கள் நேரம் எடுத்துக் கொண்டால் நடுவரும் உறுதியாக முடிவெடுக்கலாம்” என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சர்ச்சை தற்போது சமூக வலைதளங்களில் பெரிய அளவில் விவாதிக்கப்படுகிறது. ஐ.சி.சி நடுவர்களுக்கான தரநிலைகளைப் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது எனவும், எதிர்காலத்தில் இது போன்ற தரப்புசார்பு சந்தேகங்களைத் தவிர்க்க வேண்டும் எனவும் ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
