இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி, ஜூலை 10ம் தேதி பிரபலமான லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியின் போது ஏற்பட்ட ஒரு சிறிய மோதல் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது.

இந்த போட்டியின் 35வது ஓவரை இங்கிலாந்து பவுலர் பிரைடன் கார்ஸ் வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா, பந்தை அடித்துவிட்டு 2 ரன் ஓடினார். முதல் ரன் ஓடும் போது, ஜடேஜாவும், பவுலரான கார்ஸும் ஒருவருக்கொருவர் எதிரே ஓடினர். அப்போது, எதிர்பாராத முறையில் அவர்கள் ஒருவருக்கொருவர் மோதி கொண்டனர்.

இந்த மோதலில் கார்ஸ், ஜடேஜாவின் கழுத்தை பிடித்துவிட்டாரா? அல்லது அது தவறுதலா நடந்ததா? என்பதையே நெட்டிசன்கள் கலந்துரையாடி வருகின்றனர். வீடியோவில், கார்ஸ் ஜடேஜாவின் கழுத்தை பிடித்து இழுப்பது போல தோன்றுகிறது. இதை பார்த்த ஜடேஜா, ரன் முடிந்ததும் கோபத்தில் கார்ஸிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
விபரீதமாக வளர்ந்து கொண்ட இந்த சூழ்நிலையில், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்தார்.

“>

 

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்திய ரசிகர்கள் “கார்ஸ் நோக்கத்துடன் செய்தாரா?” என கேள்வி எழுப்ப, இங்கிலாந்து ரசிகர்கள் “அது வெறும் தற்செயலான விஷயம்தான்” என கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த மோதல் காரணமாக இந்தியா – இங்கிலாந்து போட்டியில் ஒரு புதிய பரபரப்பும் உருவாகியது.