அமெரிக்காவில் அமெரிக்க கிரிக்கெட் எண்டர் பிரைசஸ் ஆல் நடத்தப்படும் தொடர் மேஜர் லீ கிரிக்கெட் (MLC) . இந்த ஆண்டு நடைபெற்ற MLC T20 தொடரில் இறுதிப் போட்டியில் MI நியூயார்க் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் விளையாடினர்.
அதில் முதலில் டாஸ் வென்ற வாஷிங்டன் அணி பந்துவீச்சை தேர்வு செய்து களமிறங்கியது. இதனை அடுத்து முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய நியூயார்க் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் அடித்தது.
இதனை அடுத்து களமிறங்கிய வாஷிங்டன் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 175 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்நிலையில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வாஷிங்டன் அணி தோல்வியடைந்தது. அந்தப் போட்டியின் கடைசி ஓவரில் 12 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் நியூயார்க்கனின் பவுலர் ருசி உகர்கர் 1 விக்கெட் எடுத்து, 6 ரன்கள் கொடுத்து சிறப்பாக செயல்பட்டார்.
