இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் 3வது டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 10இல் நடைபெற்றது. அதில் முதல் இன்னிங்ஸில் 2 அணிகளும் ஒரே ரன்கள் எடுத்தன.

அதனை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 192 ரன்கள் எடுத்தது. அதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 74.5 ஓவர்களில் 170 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அதனால் 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றியை பெற்றது. இந்நிலையில் அந்தப் போட்டியின்  கடைசி வரை ஜடேஜா 61 ரன்கள் உடன் களத்தில் இருந்தார்.

இந்த நிலையில் அந்தப் போட்டியின் வெற்றியாளர்களான இங்கிலாந்து அணிக்கு போட்டி கட்டணத்தில் 10% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

அதாவது அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்கள் பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட காரணத்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 2 புள்ளிகள் இங்கிலாந்து அணிக்கு குறைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.