இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் 3வது டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 10இல் நடைபெற்றது. அதில் முதல் இன்னிங்ஸில் 2 அணிகளும் ஒரே ரன்கள் எடுத்தன.

அதனை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 192 ரன்கள் எடுத்தது. அதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 74.5 ஓவர்களில் 170 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தனால் 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றியை பெற்றது.

கடைசியில் விக்கெட்டுக்கு நுழைந்த முகமது சிராஜ் துணையுடன் ஜடேஜா தொடர்ந்து 4ஆவது அரை சதத்தை கடந்தார். அந்தச் சூழலில் சுழற்பந்து வீச்சாளர் சோய் பஷீர் வீசிய பந்தை சிராஜ் எதிர்கொண்டார்.

அப்போது பந்து பேட்டில் பட்டு உருண்டு ஸ்டம்பை தட்டியது அதை சிராஜ் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் ஆனால் அதை காலால் தள்ளிவிட முயற்சிக்கவில்லை.

இதனை அடுத்து சிராஜ் 4 ரன்னில் கிளீன் போல்ட் ஆனார் அதன் முடிவில் இந்திய அணி 74.5 ஓவர்களில் 17 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது

மேலும் அந்தப் போட்டியில் ஜடேஜா 61 ரன்கள் உடன் கடைசி வரை தளத்தில் இருந்தார் இந்நிலையில் அந்தப் போட்டியில் ஆட்டம் இழந்ததும் சிராஜ் அப்படியே மைதானத்தில் தலை குனிந்தவாறு நின்று கொண்டிருந்தார்.

இதுகுறித்து இங்கிலாந்தின் மன்னர் மூன்றாம் சார்லஸ் இந்திய கேப்டன் சுப்மன் கில்லிடம் விசாரித்துள்ளார். மேலும் கடைசி டெஸ்டின் பரபரப்பான தருணங்கள் குறித்து மன்னர் ஜாலியாக கேட்டு அறிந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து சுப்மன் கில் கூறியதாவது, “மன்னரை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி எங்களது உரையாடல் மிகவும் சிறப்பாக இருந்தது. “சிராஜ் அவுட் ஆன விதம் மிகவும் துரதிஷ்டவசமானது” என மன்னர் கூறினார்.

அந்த அவுட்டை எப்படி உணர்ந்து கொண்டீர்கள் எனவும் கேட்டார். ஆட்டத்தின் முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அப்போது அதிர்ஷ்டமில்லை. இருப்பினும் அடுத்த இரண்டு டெஸ்டில் எங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கும் என நம்புவதாகவும் கூறினேன் என்றார்.