தமிழக முதல்வர் விஜய் 300 புதிய அரசுப் பேருந்துகளின் சேவையைத் தொடங்கி வைத்த பிறகு, தனது அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வாகனங்களின் அணிவகுப்பைத் தவிர்த்துவிட்டு, திடீரென அரசுப் பேருந்து ஒன்றில் ஏறி பயணம் செய்த சம்பவம் சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. பேருந்தில் சாதாரணப் பயணியாக அமர்ந்த முதல்வர் விஜய், நடத்துநரிடம் முறைப்படி பணம் கொடுத்து டிக்கெட் எடுத்ததோடு, பேருந்தில் இருந்த சக பயணிகளுடன் மிகவும் இயல்பாகக் கலந்துரையாடினார். முதலமைச்சரின் இந்தத் திடீர் பஸ் பயணத்தை அங்கிருந்த பயணிகள் தங்களது செல்போன்களில் வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் வெளியிட, அது தற்போது மளமளவென வைரலாகி வருகிறது.
Tamil Nadu CM Joseph Vijay flagged off 300 new buses and took a ride on one of them, highlighting the state’s efforts to modernize and expand public transportation. pic.twitter.com/sUynjX6got
— VARTA ( वार्ता ) (@varta24news) June 25, 2026
பேருந்து பயணத்தின் போது ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோரிடம் அன்போடு நலம் விசாரித்த முதல்வர் விஜய், தன்னை பார்த்து கைகூப்பி வணக்கம் வைத்த நடத்துநரின் தோளில் கைபோட்டு, அவரைத் தனது அருகில் அமர வைத்துப் பாராட்டி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார். கடந்த மே 4-ஆம் தேதி தமிழகத் தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று, தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற தளபதி விஜய், வெள்ளித்திரையில் காட்டிய அதே மக்கள் நாயகன் செல்வாக்கை இப்போது நிஜ அரசியலிலும் நிரூபித்து வருகிறார். இவரது நடிப்பில் உருவான கடைசித் திரைப்படமான ‘நாயகன்’ இன்னும் வெளியாகாமல் சஸ்பென்ஸாக இருக்கும் நிலையில், முதலமைச்சராக விஜய்யின் இந்த அதிரடி பஸ் விசிட் மக்களிடையே அவரது பிரபலத்தை மேலும் உயர்த்தியுள்ளது.
