தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் மெரினா படத்தில் கதாநாயகனாக தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். இதனையடுத்து மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், நம்ம வீட்டு பிள்ளை, டாக்டர் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பிரபல இயக்குனரான ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு SK 23 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு கன்னட நடிகை ருக்மணி ஜோடியாக நடிக்க உள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடந்தது. இந்நிலையில் படம் குறித்து பேசிய ஏ.ஆர் முருகதாஸ் SK 23 ஃபாஸ்ட் பேஸ்ட் ஆக்சன் படமாக உருவாக உள்ளது. கஜினி படம் போல இதுவும் சுவாரஸ்யமான திரைக்கதையில் இருக்கும். இந்த படத்தில் ரொமான்ஸ் காட்சிகளும் இடம் பெற்றிருக்கும். படத்திற்காக சிவகார்த்திகேயன் தன்னை தயார்படுத்தி வருகிறார் என ஏ.ஆர் முருகதாஸ் கூறியுள்ளார்.