தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ஜனகராஜ். இவர் திரைப்படங்களில் பேசும் வசனத்திற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சுமார் 100-க்கும் மேற்பட்ட படங்களில் ஜனகராஜ் நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ரஜினி, கமல்ஹாசன் ஆகியோரின் படங்களில் அதிகமாக நடித்துள்ளார். இதனையடுத்து விஜய் சேதுபதி, திரிஷா இணைந்து நடித்த 96 படத்தின் பள்ளி பாதுகாவலராக நடித்திருந்தார்.

அதன் பிறகு அவரை அவ்வளவாக எந்த படத்திலும் காண முடியவில்லை. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதள பக்கத்தில் தாத்தா என்ற குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ஜனகராஜ் நல்ல உடல் எடை குறைந்து இருக்கிறார். அதனை பார்த்து ரசிகர்கள் வருத்தமடைந்தனர். மற்றொரு பக்கம் அவரது முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.