திருமணங்களில் மாப்பிள்ளைக்குப் பணத்தாள்களால் ஆன மாலை அணிவிப்பது சில ஊர்களில் வழக்கம்தான். ஆனால், இந்த வீடியோவில் வரும் மாப்பிள்ளை செய்த காரியம் காண்போரை “இதெல்லாம் ரொம்ப ஓவர் பாஸ்” எனச் சொல்ல வைத்துள்ளது. ஒரு வாலிபர் தனது திருமணத்திற்காகத் தயார் ஆகி, வீட்டின் மொட்டை மாடியில் நின்றுகொண்டிருக்கிறார்.
பொதுவாக மாலை கழுத்து வரைதான் இருக்கும். ஆனால், இந்த மாப்பிள்ளையின் கழுத்தில் ஆரம்பிக்கும் பண மாலை, மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கி, ரோடு வரை நீண்டு கொண்டே செல்கிறது.
View this post on Instagram
அந்த மாலை அறுந்து விடாமல் இருப்பதற்காக ஆங்காங்கே சிலர் அதைப் பிடித்துக் கொண்டு பேலன்ஸ் செய்கின்றனர். இதைப் பார்த்தால் அந்தத் தெரு முழுவதுமே பணத்தாள்களால் அலங்கரிக்கப்பட்டது போலத் தெரிகிறது.
இன்ஸ்டாகிராமில் ‘aarab__5416_10.k’ என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்து வியந்துள்ளனர். ஒரு லட்சம் பேருக்கும் மேல் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “என்னப்பா இது.. மாப்பிள்ளை கழுத்துல மாலையா இல்ல நோட்டுக்கட்டுல செய்த லாரியா?” என கிண்டலாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.
