இன்றைய காலக்கட்டத்தில் சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களைப் பெறுவதற்காக இளைஞர்கள் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான ஸ்டண்டுகளைச் செய்வது அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், வாலிபர் ஒருவர் தனது வாயில் எரியும் நெருப்பை வைத்துக்கொண்டு ‘ஃபயர் ஸ்டண்ட்’ செய்ய முயல்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by 🔰 Vishnu Thulasidharan 🔰 (@vishnublitz_vibes)

எதிர்பாராதவிதமாக அந்த நெருப்பு அவரது முகத்திலும், உடைகளிலும் வேகமாகப் பரவியது. ஒரு நொடியில் அவரது முகம் தீப்பிழம்பாக மாறியதைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

தப்பியோட முயன்ற அந்த இளைஞனின் நிலை காண்போர அதிர வைத்துள்ளது.  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “ஃபேமஸ் ஆக வேண்டும் என்பதற்காக இப்படியா உயிரோடு விளையாடுவது?” என்றும், “இது ஸ்டண்ட் அல்ல, தற்கொலைக்குச் சமம்” என்றும் அந்த இளைஞரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.