வீட்டில் உள்ளவர்கள் எப்போதும் சீரியல் பார்த்துக் கொண்டே இருப்பதால், தனக்கு கார்ட்டூன்ஸ் பார்ப்பதற்கு ஒரு புது டிவி வேண்டும் என்ற அடம் பிடித்து, சிறுவன் ஒருவன் தனது தாயின் மொபைல் போனைப் பயன்படுத்தி நேற்று ரகசியமாக ஆன்லைனில் ஆர்டர் செய்த 65 இன்ச் ‘கூகுள் டிவி’ இன்று வீட்டுக்கே டெலிவரியாக வந்த திடுக்கிடும் சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்டர் பாக்ஸை வீட்டிற்குள் கொண்டு வந்த டெலிவரி பாய் முன்னிலையிலேயே, அந்தப் பையனின் அம்மா அவனிடம், “உன்கிட்ட காசு இருக்கா? எதுக்குடா ஆர்டர் பண்ண? நேத்து ஆர்டர் போட்டு இன்னைக்கு வந்து நிக்குது… இதை ரிட்டன் போடட்டுமா, என்ன பண்றது? என்று கோபத்துடன் சண்டை போடுகிறார்.

“>

என்ன செய்வதென்று புரியாமல் அந்த டெலிவரி ஊழியர் திருதிருவென முழிக்கும் காட்சிகள் அப்பட்டமாக வீடியோவில் பதிவாகியுள்ளது. கார்ட்டூன் பார்ப்பதற்காக அம்மாவின் போனை ஆட்டையப் போட்டு சிறுவன் செய்த இந்த லூட்டியும், அதனால் வீட்டுக்குள்ளேயே டெலிவரி மேன் முன்னிலையில் வெடித்த அந்தச் சுவாரசியமான குடும்பச் சண்டையும் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி நெட்டிசன்களை பயங்கரமாகக் கவர்ந்து வருகிறது.