கேரளா மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்திலிருந்து சென்னையை நோக்கி விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இன்று காலை சென்னை ராணிப்பேட்டை, அரக்கோணம் வழியாக அந்த ரயில் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டது. காலையில் திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வரவிருந்த விரைவு ரயில் புளியமங்கலம் அடுத்துள்ள அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் தண்டபாளத்தில் எதிர்பாராத விதமாக சத்தம் கேட்டது.
இதனால் அங்கிருந்த பணியாளர் ஒருவர் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை கவனித்து ரயிலை நிறுத்துமாறு கூச்சலிட்டுள்ளார். அங்குள்ள பயணிகளிடம் ரயிலின் அபாய சங்கிலியை இழுக்குமாறும் கத்தியுள்ளார். உடனே பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து புளியமங்கலம் அருகே ரயிலை நிறுத்தியுள்ளார். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ரயில் தண்டவாளத்தில் பெரிய விரிசல் ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.
உடனே 30 நிமிடம் ரயிலை நிறுத்தி வைத்து விட்டு தக்க சமயத்திற்கு ஏற்றவாறு விரிசலை சரி செய்தனர். பின்னர் ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. விரிசலை உடனே பார்த்து வரவிருந்த பெரிய ஆபத்தை தடுத்து நிறுத்திய பணியாளருக்கு பயணிகள்,அதிகாரிகள் அனைவரும் நன்றிகள் கூறி பாராட்டினர்.