சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் படிக்கட்டில் அமர்ந்து பயணித்த ஒரு இளைஞர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், இன்று நகரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் சைதாப்பேட்டை ரெயில் நிலையம் அருகே நடந்தது.

காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்த 24 வயதான பாலமுருகன் என்ற இளைஞர், ரெயிலின் படிக்கட்டில் அமர்ந்து தனது கால்களை நீட்டி பயணித்தார். ரெயில் சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தை கடந்தபோது, அவரது கால்கள் நடைமேடையில்  உரசியதால் அவர் கீழே விழுந்து ரெயிலின் அடியில் சிக்கி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் சம்பவத்தின்போது அருகிலிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி, தற்போது அந்த வீடியோ காட்சி இணையத்தில் பரவிவருகிறது. இதனால் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய பரிதாபகரமான விபத்துகளைத் தவிர்க்க, பயணிகள் ரெயிலில் பாதுகாப்பான முறையில் பயணம் செய்யும் விதத்தில் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியது அவசியமாகின்றது.