நெல்லை மாவட்டத்தில் உள்ள மானுரில் கணபதி என்பவரது வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில், வீட்டின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டு பெரும் பொருட் சேதம் ஏற்பட்ட நிலையில், சிலிண்டர் வெடிப்பதற்கு முன்பாக புகை மூட்டம் பரவியதால் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், நெல்லை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் சிலிண்டர் பழுதடைந்திருந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவியுடன் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்வம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.