ஆபத்தான “டிக்டாக் வாட்டர் டேங்க் சேலஞ்ச்” செய்யும்போது ஒருவர் இறப்பதைக் காட்டும் வீடியோ ஒன்று எக்ஸ் மற்றும் ரெடிட் உள்ளிட்ட பல சமூக ஊடக தளங்களில் வைரலாகியுள்ளது. டிக் டாக் நேரலையின் போது ஒருவர் வாட்டர் டேங்க் சேலஞ்ச் என்ற பெயரில் தண்ணீர் தொட்டிக்குள் தலைகீழாக நுழைகிறார். அதன் பின் அவர் தண்ணீர் தொட்டிக்குள் தத்தளிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளனர். அதன் பின் சிறிது நேரத்தில் அவர் சிறிதும் அசைவில்லாமல் போகிறார்.

 

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் விரைவாக வைரலாகியது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவில் உள்ளவர் ஸ்மில் கிங் என்பது தெரியவந்துள்ளது. இவர் ஒரு டிக்டோக்கர். அவர் இறக்கவில்லை. இந்த வீடியோ கடந்த 2023 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பதும் தெரிய வந்துள்ளது.