இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
அதாவது அந்த வீடியோவில் அடர்ந்த காட்டுப்பகுதியில் இருவர் சைக்கிள் ரைட்டிங் சென்றனர். அப்போது திடீரென அந்தப் பாதையை கரடி ஒன்று கடந்தது. அப்போது இந்த இளைஞர்களை பார்த்த அந்த கரடி இளைஞர்களை தாக்க முயற்சி செய்தது.
ஆனால் அதில் ஒருவர் தனது சைக்கிளை கொண்டு கரடியை விரட்டினார். இதையடுத்து கரடி அங்கிருந்து தப்பி ஓடியது. அதன் பின் இருவரும் செய்வதறியாது திகைத்துப் போய் நின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
