குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர், லாரி டயருக்குள் பிளாஸ்டிக் பையில் சுருட்டி வீசப்பட்டிருந்த பச்சிளம் ஆண் குழந்தையைக் கண்டெடுத்து, அக்குழந்தையைத் தனது தம்பியாகவே ஏற்று வளர்த்து வரும் நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த இந்தச் சம்பவத்தின் போது, மீட்கப்பட்ட குழந்தை வெறும் 7 மாதங்களே ஆன நிலையில் மிகவும் பலவீனமாக இருந்ததால், அதனைத் தத்தெடுப்பு மையத்தில் ஒப்படைக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Upworthy People (@upworthy_people)

ஆனால், அக்குழந்தையுடன் ஏற்பட்ட ஒருவித ஆத்மார்த்தமான பிணைப்பால், அந்த இளைஞர் தனது தாயைச் சம்மதிக்க வைத்து குழந்தையைத் தத்தெடுத்து அதற்கு ‘ஆரவ்’ எனப் பெயரிட்டு வளர்க்கத் தொடங்கினார்.

தற்போது ஆரோக்கியமாக வளர்ந்துள்ள ஆரவ்வுக்கு ஜூன் 14-ஆம் தேதியைப் பிறந்தநாளாகக் கொண்டாடி வரும் அந்த இளைஞரின் செயலுக்குப் பாராட்டுகள் குவிந்தாலும், கைவிடப்பட்ட குழந்தைகளைக் கண்டெடுக்கும் போது சட்டப்படி காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்து முறையாகத் தத்தெடுக்க வேண்டியதன் அவசியத்தை சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.