இந்திய சாலைகளின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ரஷ்ய பெண் ஒருவர் கையாண்ட ‘தேசி’ யுக்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் சாலைகளை கடப்பது வெளிநாட்டவர்களுக்கு சவாலான காரியமாக இருக்கும் நிலையில், அந்தப் பெண் தனது தோழிக்கு மிகவும் எளிமையான வழிமுறையை கற்றுக்கொடுக்கிறார்.
மேலும் வாகனங்கள் வேகமாக வந்து கொண்டிருக்கும் போது, எந்தப் பயமும் இன்றி கையை உயர்த்தி சிக்னல் காட்டியபடி சாலையை கடக்கும் அந்த வீடியோ, இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையோடு அப்படியே ஒத்துப்போவதால் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த இணையதளவாசிகள், “இவர் பார்ப்பதற்குத்தான் ரஷ்யர், ஆனால் மனதளவில் ஒரு இந்தியராக மாறிவிட்டார்” என நகைச்சுவையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Only in India! Russian tourist shows her friend the secret hack to cross Jaipur’s crazy roads pic.twitter.com/S99mnWcUDT
— Wisdom Walk (@wisdom_walkss) January 1, 2026
“>
இந்நிலையில் ‘ஜீ நியூஸ்’ வெளியிட்டுள்ள இந்த செய்தியில், இந்தியாவில் வாழும் வெளிநாட்டவர்கள் இங்கிருக்கும் கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் முறைகளை எவ்வளவு விரைவாக கற்றுக்கொள்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை விட, இங்குள்ள ‘சமிக்ஞை’ முறையே சாலையை கடக்க பெரிதும் உதவுகிறது என்பதை இந்த ரஷ்ய பெண் நிரூபித்துள்ளார்.
