1970-களில் முதன்முதலாக இரட்டை அடுக்கு பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பேருந்து சென்னை மாவட்டத்தில் சுமார் 10 வருடங்களாக செயல்பட்டு வந்தது. பின்னர் 1980 -ல் இந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டது. மீண்டும் 1997 -ஆம் ஆண்டு இயக்கப்பட்ட இரட்டை அடுக்கு பேருந்து தொடர்ந்து 10 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. சென்னை உயர்நீதிமன்றம் -தாம்பரம் இடையேயான போக்குவரத்து வழித்தடத்தில் இரட்டை அடுக்கு பேருந்துகள் கடைசியாக இயக்கப்பட்டன.
பின்னர் 2008 -ஆம் ஆண்டு மீண்டும் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இரட்டை அடுக்கு பேருந்துகள் சென்னையில் இயக்கப்படவில்லை. இந்த நிலையில் இரட்டை அடுக்கு பேருந்துகளில் மீண்டும் சென்னையில் இயக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த முறை வழக்கமான பயணிகள் பயணித்துக்கு மட்டமல்லாமல் சுற்றுலா பயணத்திற்கும் பயன்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது, ஒரு காலத்தில் இரட்டை அடுக்கு பேருந்துகளில் பயணிகள் மிகவும் விரும்பி பயணம் செய்தனர். ஆனால் சில காரணங்களால் அவ்வகை பேருந்துகள் நிறுத்தப்பட்டது. தற்போது ரெட்டை அடுக்கு பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட உள்ளது.
அதுவும் இந்த ஆண்டு இறுதிக்குள் இயக்கப்படும்.ஆனால் இந்த முறை சென்னை நகர சுற்றுலாவுக்கு பயன்படுத்த உள்ள இவ்வகை பேருந்துகளில் முன்பதிவு செய்யும் வசதிகளும் ஏற்படுத்தப்படும்.முதலில் 20 மின்சார இரட்டை அடுக்கு பேருந்துகளை இயக்குவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பின்னர் வரும் நாட்களில் பயணிகளின் தேவைக்கேற்ப மேலும் இயக்கப்படும். அதிலும் வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் சென்னையை சுற்றி பார்பதற்கு பயன்படுத்தப்படும் இரட்டை அடுக்கு பேருந்துகள் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான வழித்தட திட்டமிடல் மற்றும் கட்டணம் தொடர்பான நிர்ணயம் ஆகியவை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும், இதற்காக டெண்டரும் விரைவில் அறிவிக்கப்படும்.
இந்த இரட்டை அடுக்கு பேருந்துகள் சாதாரண மின்சார பேருந்துகளை விட அதிகமாக 90 பயணிகளை ஏற்றிச் செல்லும் அளவிற்கு திறன் கொண்டவையாக அமைந்திருக்கும். சென்னையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பேருந்தில் பயணிக்கும் பயணிகள் சிரமப்படுவதாலும் பொதுமக்களுக்கு அதிக தேவை உள்ளதை எண்ணி இரட்டை அடுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது என கூறினர்.
