கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள பழமைவாய்ந்த ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவில் திருக்கல்யாண உற்சவத் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான எஸ்.பி. வேலுமணி தனது குடும்பத்தினருடன் வருகை தந்து சாமி தரிசனம் செய்தார்.

கோயில் திருவிழாவையொட்டி மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற கொண்டாட்டத்தில், ஊர் பொதுமக்களுடனும் அதிமுக தொண்டர்களுடனும் இணைந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உற்சாகமாக நடனமாடினார்பூசாரி சக்தி பூ சட்டி ஏந்தி கம்பத்தைச் சுற்றி பக்தி பரவசத்துடன் ஆடியதை தொடர்ந்து.

வேலுமணியும் மக்களுடன் ஒருவராகக் கலந்து நடனமாடியது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையே பெரும் வரவேற்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியதுசாமி தரிசனத்திற்குப் பிறகு, மிலாது நபி திருநாளை முன்னிட்டு சுகுணாபுரம் பகுதியில் ஊர்வலமாகச் சென்ற அரபிக் பாடசாலைகளுக்கு எஸ்.பி. வேலுமணி குளிர்பானங்கள், பழரசங்கள் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

“>

கோயில் விழாவில் மக்களுடன் கலந்து கொண்டு நடனமாடியதுடன், இஸ்லாமியக் குழந்தைகளுக்கு இனிப்புகளையும் வழங்கி வேலுமணி சிறப்பித்த நிகழ்வு சமூக வலைதளங்களிலும் அப்பகுதியிலும் வைரலாகி வருகிறது.