கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள ஆரத்தி உக்கடா கோயிலில் பெண் காவல் சார்பு ஆய்வாளர் சவிதா பி. பாட்டீல் மற்றும் பாஜக எம்.எல்.ஏ. பி. சுரேஷ் கௌடாவின் மகள் ஐஸ்வர்யா இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான மேலும் சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

பீமா அமாவாசை தினத்தன்று கோயிலின் கருவூல நுழைவுப் பகுதி தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாக புதிய வீடியோக்களில் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இதுவரை இந்த விவகாரத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

 

சம்பவம் தொடர்பான கூடுதல் வீடியோக்கள் வெளியாகி வரும் நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.