கன்னியாகுமரி மாவட்டத்தில் “டைம் பாஸ்” என்ற தனியார் மதுபானக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்குப் பள்ளி மாணவர்கள் சீருடையுடன் சென்று மது அருந்தியதாக ஒரு புகைப்படமும், செய்தியும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் IPS அவர்கள் உடனடியாக அந்த மதுபானக் கூடத்திற்கு நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.
அங்கிருந்த மதுபானக் கூட ஊழியர்களிடம் சட்ட விதிமுறைகள் குறித்தும், பள்ளி மாணவர்களுக்கு மது வழங்கக் கூடாது என்பது குறித்தும் கடுமையாக அறிவுறுத்தல்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்களை அனுமதித்துச் சட்ட விதிகளை மீறியதற்காக அந்தத் தனியார் மதுபானக் கூடத்திற்கு காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் சீல் வைத்து பூட்டப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி ஸ்டாலின் @stalin_ips அவர்களின் அதிரடி நடவடிக்கை
நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் உள்ள “TIME PASS” என்ற தனியார் மதுபானக் கூடத்தில் மாணவர்கள் சீருடையுடன் மது அருந்தியதாக புகைப்படம் மற்றும் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை… pic.twitter.com/KAp5yQmYym
— Kᴀʙᴇᴇʀ – தக்கலை கபீர் (@Autokabeer) August 19, 2026
“>
மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் வகையில் சட்டத்தை மீறிச் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இந்த அதிரடி நடவடிக்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
