சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் நேற்று மாலை தங்கம் விலை 1560 ரூபாய் வரையில் அதிகரித்த நிலையில் தற்போது விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1600 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,16,800 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலை அதிகரித்து ஒரு கிராம் 15927 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,27,416 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 10 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 260 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,60,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
