மும்பை இரயில் நிலையத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. நபர் ஒருவர், மத்திய இரயில்வேயின் லோக்கல் இரயில் கூரை மீது திடீரென ஏறியுள்ளார்.
கூரை மீது ஏறிய அந்த நபர், அங்குச் சென்றுகொண்டிருந்த 25,000 வோல்ட் உயர் அழுத்த மின்சாரக் கம்பியின் அருகே ஆபத்தான முறையில் சென்றுள்ளார். எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில், அவர் படுகாயமடைந்து தீக்காயங்களுடன் அங்கேயே விழுந்தார்.
சம்பவத்தைப் பார்த்த இரயில்வே அதிகாரி ஒருவர், உடனடியாகச் செயல்பட்டு அந்தப் பகுதிக்கான மின் இணைப்பைத் துண்டித்தார். பின்னர், தனது உயிரைப் பொருட்படுத்தாமல் ஆபத்தான நிலையில் இருந்த அந்த நபரை மீட்டார்.
படுகாயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள ராஜாவாடி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
📍Ghatkopar Railway Station, Mumbai.
A man climbed onto the roof of a Central Railway local and came dangerously close to the 25 kV overhead electric line, suffering severe electric shock and burn injuries.
Railway officer immediately isolated the power and carried out a… pic.twitter.com/MWdnti031Z
— Gems Of Railway (@GemsOfRailway) August 18, 2026
“>
இரயில் கூரைகள் மீது ஏறுவது உயிருக்கே ஆபத்தானது என்றும், பயணிகள் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் இரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.
