ரயில் பயணத்தின்போது பொருட்கள் திருடப்பட்டதால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர், ரயிலின் கண்ணாடியை அடித்து நொறுக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கும் இதுபோன்ற செயல்களுக்குப் பொதுமக்கள் மத்தியில் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்தூரில் இருந்து டெல்லி நோக்கிச் சென்ற ரயிலில் தன் குழந்தையுடன் பயணித்த பெண் ஒருவர் உறங்கிக் கொண்டிருந்தபோது, அவரது பணம், செல்போன் மற்றும் ஆவணங்கள் அடங்கிய பை திருடப்பட்டுள்ளது. கண் விழித்துப் பார்த்தபோது பை திருடுபோனதை அறிந்த அவர் ஆத்திரமடைந்து, கையில் இருந்த பலகையைப் போன்ற பொருளால் ரயிலின் ஜன்னல் கண்ணாடியை பலமாகத் தாக்கியுள்ளார். இதில் கண்ணாடி முழுமையாக உடைந்து சிதறியது.

“>

திருடப்பட்ட பொருள்களை மீட்க புகார் அளிப்பது போன்ற முறையான வழிகளைப் பின்பற்றுவதற்கு மாறாக, பொதுச் சொத்தை சேதப்படுத்திய இத்தகைய செயல் சக பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோபம் நியாயமானதாக இருந்தாலும், அவசரப்பட்டு பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது பொதுமக்களுக்கே இழப்பை ஏற்படுத்தும் என்பதால், அடிப்படை குடிமை உணர்வு குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.