சென்னையில் இருந்து இயக்கப்படும் மின்சார ரயில்களில் சில நபர்கள் பொதுமக்களிடம் அச்சுறுத்தும் வகையில் நிதியுதவி என்ற பெயரில் வசூலில் ஈடுபடுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இது பயணிகளிடையே பெரும் அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சென்ட்ரல் பகுதியில் இருந்து திருவள்ளூர் மார்க்கமாகச் செல்லும் மின்சார ரயில்களில் சிலர் முறையற்ற செயல்களில் ஈடுபட்டு, பயணிகளிடம் வலுக்கட்டாயமாகப் பணம் வசூலிப்பதாகக் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. இந்தச் செயல்களைத் தட்டிக் கேட்கும் பொதுமக்களை மிரட்டும் தொனியில் பேசுவதாகவும், இதனால் ரயில்களில் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பெட்டி எண்கள் மற்றும் விவரங்களுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்க முயன்றாலும், உரிய நேரத்தில்தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற ஆதங்கம் பயணிகள் மத்தியில் நிலவுகிறது.
சென்னை சென்ட்ரலில் திருவள்ளுவர் நோக்கி செல்லும் மின்சார ரயில்களில் பாரத பிரதமர் நரேந்திர மோடி இழிவு செய்யும் வகையில் மிகக் கேவலமாக பேசி நிதி வசூல் செய்கிறார்கள்.
பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் மிரட்டப்படுகிறார்கள்.
ரயில் பெட்டிகள் இருக்கும் எண்ணிற்கு தொடர்பு கொண்டு… pic.twitter.com/EBrOfByJuO
— Rajbjp (@rajsd_bjp) August 19, 2026
“>
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், ரயில்களில் நடக்கும் இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களைத் தடுத்து நிறுத்தவும் தெற்கு ரயில்வே நிர்வாகம் உடனடியாகத் தீவிரத் தற்காப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலுவான கோரிக்கைகள் எழுந்துள்ளன.
