தமிழ்நாடு சட்டமன்ற அவைக்குள் நுழைந்தவுடன் அனைத்து உறுப்பினர்களையும் நாடிச் சென்று நலம் விசாரிக்கும் தமிழக முதல்வரின் பண்பு அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
கட்சி பேதமின்றி எதிர்க்கட்சி உறுப்பினர்களைத் தேடிச் சென்று வாழ்த்துத் தெரிவிக்கும் இத்தகைய அரசியல் நாகரிகம் இதுவரை எந்தத் தலைவரிடமும் காணப்படாத ஒன்று எனப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற எந்த வித்தியாசமும் இல்லாமல் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் நேரில் சந்தித்து அன்பைப் பகிர்ந்து கொள்ளும் முதல்வரின் எளிமையான குணம் பலரையும் கவர்ந்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நடிகர் விஜய் உள்ளிட்டோரும் இந்த வாழ்த்துகளை மரியாதையுடன் ஏற்றுக்கொள்வது அவையில் ஒரு ஆரோக்கியமான சூழலை உருவாக்குகிறது.
அதேசமயம், ஆளுங்கட்சி தரப்பில் உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட சில முக்கியப் பிரமுகர்கள் இருக்கையில் இருந்து எழுந்து மரியாதை செலுத்துவதைத் தவிர்ப்பது போன்ற செயல்பாடுகள் அரசியல் பார்வையாளர்களிடையே முகம் சுளிக்க வைத்துள்ளதாகவும், இது திமுகவினரின் இயல்பான குணாதிசயமாகப் பார்க்கப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
As far as I know, I have never seen any Chief Minister coming out of his place and greets everyone in the Legislative assembly.
This man is a classic example of pure soul. He never fails to greet anyone in the assembly.
He even greets opponents like ADMK & DMK on the floor.… pic.twitter.com/cH2Kf6IfRV
— Tanya Shree (@Tanya_chopsy) August 10, 2026
“>
அரசியல் வேறுபாடுகளைக் கடந்து மனிதநேயத்திற்கும் பண்பாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் ஒரு தலைவரைத் தமிழகம் பெற்றுள்ளது பெருமைக்குரிய விஷயம் என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
