பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்குத் தகுதியான பரம்பரை அல்லாத அறங்காவலர்களைத் தேர்வு செய்யும் மாநில அளவிலான இந்து சமய அறநிலையத்துறை குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையிலும், தகுதியான மற்றும் நேர்மையான நபர்களை அறங்காவலர்களாகத் தேர்வு செய்யும் நோக்கத்திலுமான மாநில அளவிலான உயர்நிலைக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி இணைக்கப்பட்டுள்ளார்.

திரைத்துறையில் வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம்வரும் அர்ச்சனா கல்பாத்திக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள இந்த முக்கியப் பொறுப்பு, ஆன்மீக மற்றும் நிர்வாக வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

“>

 

கோயில் நிர்வாகங்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் அரசது இந்த முன்னெடுப்புக்குத் திரைப்பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.