பாட்டியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் வகையில், ஈஷா என்ற பேத்தி தனது பாட்டியை முதல்முறையாக விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளார். விமானத்தில் இதுவரை பயணம் செய்திராத பாட்டிக்கு, பேத்தி இந்த மகிழ்ச்சியான அனுபவத்தை ஏற்பாடு செய்துள்ளார். விமானப் பயணத்துடன் கோவாவையும் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு பாட்டிக்கு கிடைத்துள்ளது. இதுதொடர்பான விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
விமானத்தில் ஏறிய பாட்டியின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியும், குழந்தை போன்ற ஆர்வமும் விடியோவில் பதிவாகியுள்ளது. விமானப் பயணத்தை முதன்முறையாக அனுபவித்த அவர், சுற்றிலும் உள்ளவற்றை ஆர்வத்துடன் பார்த்ததாகத் தெரிகிறது. பாட்டியை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஈஷா இந்தப் பயணத்தை ஏற்பாடு செய்துள்ளார். பேத்தியின் இந்த அன்பான முயற்சி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
View this post on Instagram
விமானப் பயணத்தைத் தொடர்ந்து பாட்டியை கோவாவுக்கு அழைத்துச் சென்ற ஈஷா, அங்கு அவருடன் பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்துள்ளார். கோவாவின் இயற்கை அழகு மற்றும் சுற்றுலாத் தலங்களை பாட்டியுடன் சேர்ந்து ரசித்துள்ளார். பாட்டியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய மகிழ்ச்சியை ஈஷா விடியோவில் பகிர்ந்துள்ளார். பாட்டி-பேத்தி இடையேயான அன்பை வெளிப்படுத்தும் இந்தப் பயணம் பலரையும் நெகிழச் செய்துள்ளது.
இந்த விடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, பலரும் பாட்டி மற்றும் பேத்திக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். பணம் செலவழிப்பதைவிட, நம் அன்புக்குரியவர்களின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவது தரும் மகிழ்ச்சி தனித்துவமானது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். பாட்டியின் கனவை நிறைவேற்றிய ஈஷாவின் முயற்சியைப் பாராட்டியும் பதிவுகள் வெளியாகி வருகின்றன. இந்த நெகிழ்ச்சியான பயண விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
